Tuesday, October 30, 2012

மில்லேனியம் நாயகன்



பி கல்யாணசுந்தரம் அவர்கள் சமூக ஆர்வலர் என்ற உணர்வுடன் கடந்த 45 ஆண்டுகள் சமூக சேவையாற்றி கொண்டுள்ளார், அவர் நூலக அறிவியலில் தங்க பதக்கம் பெற்றவர் , அவர் இலக்கியம், வரலாற்றில் ஒரு MA பட்டம் பெற்று உள்ளார் , தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள குமரகுருபர கலை கல்லூரியில் நூலகராக பணி ஆற்றிய அவர் தனது 35 ஆண்டு வாழ்க்கையில் அவரது சம்பளம் அனைத்தையும் தொண்டு செய்வதற்காக கொடுத்து, தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூலி வேலை செய்துள்ளார் . மேலும் திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு அவரது உடல் மற்றும் கண்கள் தானம் செய்ய முன் வந்திருக்கிறார்.

மத்திய அரசு 'இந்தியாவின் சிறந்த நூலகர் என்று `அவரை பாராட்டி உள்ளது. அவர் மேலும் 'உலக முதல் பத்து நூலகர்கள் ஒருவராக `தேர்வு. ' செய்யப்பட்டு உள்ளார் , ஐக்கிய நாடுகள் அமைப்பு 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த குடி மகன் என்ற விருதை அளித்துள்ளது ' சர்வதேச (Biographical சென்டர்)சரித்திர மையம், கேம்பிரிட்ஜ், உலகின் உயர்குடிப்பிறப்பாகவும் அவரை கவுரவித்தது. ஒரு அமெரிக்க நிறுவனம் மில்லேனியம் `நாயகன் என்று அவரை தேர்வு செய்துள்ளது. '

அவர் "பாலம்' என்ற சமூக நல அமைப்பு உருவாக்கி உள்ளார் , அதன் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்று உள்ளார்.
பாலம் அமைப்பு மூலம் அவர் வசதி பெட்ட்ரவர்களிடம் பணத்தை பெற்று இல்லாதவர் களுக்கு உதவி செய்கிறார் , தந்து நீண்ட நாள் திட்டமாக தேசீயமயமக்கப்பட்ட டிஜிட்டல் நூலகத்தை உருவாக்க எண்ணி உள்ளார்.

இந்த மாமனிதரை நினைத்து பெருமை கொள்வோம், நீண்ட நாள் அவர் சேவை தொடர வாழ்த்தி வணங்குவோம்


No comments :

Post a Comment