Monday, October 29, 2012

மத்திய அமைச்சரவையில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் பெரும் மாற்றம் செய்தார்.

புது டெல்லி, மத்திய அமைச்சரவையில் நேற்று அக். - 29 -2012 பிரதமர் மன்மோகன்சிங் பெரும் மாற்றம் செய்தார். 22 அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தபடி ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. ஆந்திரா, மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.

16 ஆண்டுகளுக்கு பிறகுகாங்., வசம் ரயில்வே:
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாகக் கருதப்படும், ரயில்வே துறை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் வசம் வந்துள்ளது. இந்த முறை, மிச்சம் மீதி இல்லாமல், ஒட்டுமொத்த துறையும், காங்கிரஸ் வசமே வந்துள்ளது; இணையமைச்சர்கள் அனைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே.
தனி பட்ஜெட், ஏகப்பட்ட நிதி ஒதுக்கீடு, தனி ரயில் என, ஏராளமான வசதிகள் கொண்ட ரயில்வே துறையின், காங்கிரஸ் அமைச்சராக, கடைசியாக இருந்தது, காமன்வெல்த் ஊழல் புகழ், சுரேஷ் கல்மாடி. 1996ல், நரசிம்மராவ் ஆட்சியின் போது, ரயில்வே அமைச்சராக, கல்மாடி இருந்தார்.அதற்குப் பிறகு, கடந்த, 16 ஆண்டுகளாக, காங்கிரஸ் வசம் அந்தத் துறை வரவே இல்லை. கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஆசை போன்றவற்றால், கூட்டணி கட்சிகளுக்கு அந்தத் துறை, தாரை வார்க்கப்பட்டது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், இரண்டாவது ஆட்சியில், கடந்த மூன்றாண்டுகளாக, ரயில்வே துறையின் அமைச்சர்களாக, மம்தா பானர்ஜி, தினேஷ் திவேதி மற்றும் முகுல் ராய் இருந்தனர். முகுல் ராய் ராஜினாமா செய்த பிறகு, காங்கிரஸ் கட்சியின், மூத்த அமைச்சர்களில் ஒருவரான, சி.பி.ஜோஷி தற்காலிகமாக கவனித்து வந்தார்.

நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, ரயில்வே துறை அமைச்சராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தத் துறையின் இணையமைச்சர்களாக, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவுக்கு "ஜாக்பாட்' சிரஞ்சீவி உட்பட ஆறு பேருக்கு பதவி,அதிகபட்சமாக, ஆந்திராவைச் சேர்ந்த, ஆறு பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், பல்லம் ராஜு, இணை அமைச்சர் பதவியிலிருந்து, கேபினட் அமைச்சராகவும், நடிகர் சிரஞ்சீவி, தனிப் பொறுப்புடன் கூடிய, இணை அமைச்சராகவும் பதவியேற்றனர்.
இதுதவிர, சூர்ய பிரகாஷ் ரெட்டி, சர்வ சத்ய நாராயணா, பல்ராம் நாயக், கில்லி கிருபாராணி உள்ளிட்டோர், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளது.

No comments :

Post a Comment